மகிழ்ச்சிக்குத் திரும்பிய கரீஷ்மா

கரீனா கபூரும், சைப் அலிகானும் கொஞ்ச காலமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் நலனை மட்டும் பார்க்காமல் கரீஷ்மாவின் இல்லற சிக்கலுக்கும் தற்போது தீர்வு கண்டு கரீஷ்மா குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம் பரவ வழி வகுத்துள்ள கதை தற்போது வெளியாகியுள்ளது.
கரீஷ்மாவுக்கும், அவரது கணவர் சஞ்சய் கபூருக்கும் இடையே மனத்தாங்கல் இருந்து வந்தது. இதனால் கரீஷ்மா விரக்தியுடன் காணப்பட்டார். இன்று நேற்று இல்லை, கடந்த இரு வருடங்களாகவே பூசலில் இருந்து வந்தனர் கரீஷ்மா - சஞ்சய் தம்பதியினர்.
மகள் சமைரா பிறந்ததும், டெல்லியில் உள்ள கணவர் வீட்டிலிருந்து கிளம்பி மும்பைக்கு தாய் வீட்டுக்கு வந்து விட்டார் கரீஷ்மா. இருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூட பேசப்பட்டு வந்தது.
இந்தநிலையில்தான் கரீனாவும், சைப்அலி கானும் மேட்டரில் தலையிட்டனர். கரீஷ்மாவுக்கு கரீனாவும், சஞ்சய்க்கு, சைப் அலியும் பல்வேறு அட்வைஸ்களை எடுத்துச் சொல்லி இருவரது மனப் புழுக்கத்தையும் விலக்கி இருவரையும் சந்திக்க வைத்து மனம் விட்டுப் பேச வழி செய்தனர்.
இதன் விளைவு கணவருடன் சமரசமாகி விட்டார் கரீஷ்மா. மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் விலகி கணவருடன் மீண்டும் இணைந்துள்ளாராம் கரீனா.
கரீனா, சைப் அலிக்காக இல்லாவிட்டாலும், தனது மகளுக்காக கணவருடன் இணைய அவர் முடிவெடுத்தாராம்.
பேஷ், பேஷ்.


Click it and Unblock the Notifications











