'ஆக்ஷன்' சொல்லி 'இளைஞனை' இயக்கிய முதல்வர் கருணாநிதி

By Sudha

Karunanidhi
தாய்க் காவியம் என்ற நாவலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இளைஞன் என்ற புதிய படத்தின் முதல் காட்சியை ஆக்ஷன் சொல்லி இயக்கினார் முதல்வர் கருணாநிதி.

மக்கள் எழுத்தாளர் மக்ஸீம் கார்க்கி எழுதிய தாய் என்ற உலகப் புகழ் நாவலைத் தழுவி, முதல்வர் கருணாநிதி எழுதிய தொடர்தான் இந்த தாய்க் காவியம்.

இளைஞன் திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் முதல்வர் கருணாநிதி. இதில் கவிஞர் பா. விஜய் நாயகனாவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்

இதன் படப்பிடிப்பு துவக்க விழா இன்று காலை புளியந்தோப்பில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடந்தது.

பா.விஜய் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஒன்று திரட்டி முதலாளிக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராவது போன்று முதல் காட்சி எடுக்கப்பட்டது (ரஷ்யாவில் தொழிலாளர்களை ஆலை முதலாளிக்கு ஒன்று திரட்டுவது போல் தாய் நாவலில் வருகிற காட்சி அது.)

இந்தக் காட்சியை முதல்வர் கருணாநிதி பங்கேற்று 'ஆக்ஷன்' என்று சொல்லி இயக்கி, படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், மணிவண்ணன், அமிர்தம், தியாகு, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், தயாரிப்பாளர் எஸ்.மார்ட்டின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X