மகன் படம் - நம்பிக்கையில் கே.டி.குஞ்சுமோன்

ரொம்ப காலமாகி விட்டது குஞ்சுமோனின் படத்தைப் பார்த்து. ஒரு காலத்தில் தடபுடலாக படம் எடுத்துக் கொண்டிருந்தவர் குஞ்சுமோன். ஷங்கரை அறிமுகப்படுத்தியவர். இன்று ஷங்கர் எங்கேயோ போய் விட்டார். குஞ்சுமோனும் கூட திரையுலகை விட்டு நேற்று வரை எங்கேயோ போயிருந்தார். தற்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார்.
தனது மகனையே ஹீரோவாகப் போட்டி காதலுக்கு மரணமில்லை என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படம் தனது மகனுக்கு மட்டுமல்லாமல், தனக்கும் மறு பிறவி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸானது. இதற்கு ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு உள்ளது என்பதை அறிவதற்காக அபிராமி தியேட்டருக்குப் போயிருந்தாராம் குஞ்சுமோன்.
டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் நன்றாக வந்திருக்கிறது என்று கூற குளிர்ந்து போய் விட்டதாம் குஞ்சுமோனுக்கு.
அதே போல தனது மனைவியுடன் அபிராமி மாலுக்கு வந்திருந்த ஷங்கரும், குஞ்சுமோனைப் பார்த்து, படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்று ஆறுதலாக கூறினாராம்.
எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்று சந்தோஷமாக கிளம்பிச் சென்றாராம் குஞ்சுமோன்.


Click it and Unblock the Notifications











