4ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி!

'பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர்' என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரஜினி குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. டிக்னிட்டி ஆப் வொர்க் என்ற தலைப்பில் அந்தப் பாடம் அமைந்திருந்தது.
இப்போது இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் என்று 4ம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் ஒரு கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல்வகை துணுக்குகள் என்ற தலைப்பில் 18வது பாடத்தில் ரஜினிகாந்தின் படத்தைப் போட்டு.. இவர் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.
படத்தின் அடிக்குறிப்பில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
அதிக சம்பளம் சினிமா சிபிஎஸ்இ பாடத்திட்டம் ரஜினி cbse cinema highly paid actor rajini syllabus text book


Click it and Unblock the Notifications