நயன்தாரா ஒரு விசித்திரம் - லிங்குசாமி

By Staff

Karthi with Lingusamy
கடைசி நிமிடம் வரை நயன்தாராவை எங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் என்னென்னமோ பேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டார் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி டைரக்டு செய்யும் பையா' என்ற படத்தை அவருடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ் தயாரிக்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்துக்காக அவருக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டது.

கதாநாயகன் கார்த்தி வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததால், பையா' படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நயன்தாரா வேறு படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல், பையா' படத்தின் படப்பிடிப்புக்காக 3 மாதங்கள் காத்திருந்தார்.

இந்த நிலையில், நயன்தாரா சம்பளத்தை குறைத்துக்கொண்டால்தான் பையா' படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியும் என்று லிங்குசாமி தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. சம்பளத்தை குறைத்துக்கொள்ள நயன்தாரா மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்த படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பையா படத்துக்காக நயன்தாரா வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை இதுவரை திருப்பி தரவில்லை. அந்த பணத்தை நயன்தாரா திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார்.

பதிலுக்கு 3 மாதங்கள் காத்திருந்ததால், எனக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. அதற்கு பையா' பட அதிபர் நஷ்ட ஈடு கொடுத்தால், அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்து விடுகிறேன், என்று நயன்தாரா நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இந்த 2 புகார்களும் நாளை விசாரணைக்கு வருகின்றன.

இந்த நிலையில், நயன்தாரா விலக்கப்பட்டது பற்றி இதுவரை கருத்து சொல்லாமல் இருந்த டைரக்டர் லிங்குசாமி, இப்போது அதுபற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

நயன்தாரா மீது இப்போதும் எனக்கு எந்த கசப்பும், வெறுப்பும் இல்லை. நயன்தாரா, எனக்கு பிடித்த நடிகை. அவரது சினிமா வாழ்க்கை பாதை விசித்திரமாக-வித்தியாசமாக இருக்கும்.

எல்லோரும் டாப் கியரில்' வேகமாக முன்னேறியவர்கள் என்றால், இவர் ரிவர்ஸ் கியரில்' முன்னேறியவர். ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து, இப்போது தனுஷ் போன்ற இளைய நடிகர்களுடன் நடிப்பது வேறு யாருக்கும் அமையாது. வெற்றி பெறவும் முடியாது.

நயன்தாரா வெற்றியும் பெற்றார். அவருடைய அழகு, தோற்றம், ஸ்டைல் எனக்கு பிடிக்கும். சமீபத்தில், யாரடி நீ மோகினி' படத்தில் அவரை மிகவும் ரசித்தேன்.

பையா' படத்தின் பட்ஜெட்டை வேறு மாதிரியாக மாற்றியபோது, நயன்தாரா சம்பளத்தை குறைக்க சொன்னேன். எங்கள் தரப்பு நியாயத்தை நாகரிகமாக எடுத்து சொன்னோம். ஆனால் அவர் அதற்குள் என்னென்னவோ பரபரப்பாக வெளியில் கூறிவிட்டார்.

நயன்தாராவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவே நினைத்தோம். அவரை நடிக்க வைக்கவே விரும்பினேன். ஆனால் அவரோ அவரது மானேஜரோ எந்த பதிலும் பேசவில்லை. அவருக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று வேறு ஒருவர் மூலம் அறிந்துகொண்டேன். அதன்பிறகுதான் தமன்னாவை தேர்வு செய்தோம், என்றார் லிங்குசாமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X