முடிந்தது மன்மதன் அம்பு... டிசம்பர் ரிலீஸ்?

கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில், ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் மன்மதன் அம்பு, காதல், நகைச்சுவை கலந்த ஒரு ஜாலிப் படம். மாதவன், சங்கீதாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஐரோப்பா, கொடைக்கானல் என குளுகுளு பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்தது.
சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைக் கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள கேஎஸ் ரவிக்குமாரின் வீட்டில் நிறைவு விழா விருந்து ஞாயிற்றுக்கிழமை நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, ஹீரோ கமல், ஹீரோயின் த்ரிஷா, மாதவன் உள்பட படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார்.
Comments
கமல் ஹாஸன் த்ரிஷா படப்பிடிப்பு நிறைவு மன்மதன் அம்பு மாதவன் kamal ks ravikumar madhavan manmathan ambu trisha


Click it and Unblock the Notifications