'பம்பரக் கண்ணு' முமைத்!

விக்ரம், ஷ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் படம் கந்தசாமி. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் கந்தசாமியில் கலக்கல் அம்சமாக பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே என்ற சூப்பர் ஹிட் பழைய பாட்டை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.
சந்திரபாபுவின் குரல் பிளஸ் அசத்தல் டான்ஸில் உருவான ஹிட் பாட்டு இது. இந்தப் பாட்டைத்தான் இப்படத்துக்காக மாடர்ன் டேஸ்ட்டில் ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்தப் பாட்டுக்கு ஆடியிருப்பவர் முமைத்கான்.
முமைத்துடன் இணைந்து விக்ரம் படு ஜாலியாக ஆட்டம் போட்டிருக்கிறாராம். முமைத்கான் முன்பு போல குத்துப் பாட்டுக்களுக்கு ஆடுவதில் நாட்டம் செலுத்துவதில்லை. தெலுங்கில் அவர் ஹீரோயினாகி விட்டதால் ரொம்ப அரிதாகத்தான் குத்துப் பாட்டுக்குளுக்கு ஆட்டம் கட்டுகிறார்.
பம்பரக் கண்ணாலே பாட்டுக்கு ஆடும் வாய்ப்பு தேடி வந்தபோது பாட்டு பிடித்துப் போய் ஒத்துக் கொண்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications