மிஷ்கினின் குட்டிப் படம்

By Staff

Mysskin with Snightha in Nandhalala
நந்தலாலாவை முடித்து விட்ட நிம்மதியோடு இருக்கும் இயக்குநர் மிஷ்கின் அடுத்து முகமூடியை இயக்கப் போகிறார். ஆனால் அதற்கு முன்பு ஒரு குறும்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

நந்தலாலா மூலம் மிஷ்கினும் ஹீரோவாகிறார். இப்படத்தின் இசை ஏற்கனவே பிரமாதமாக பேசப்பட்டு வருகிறது. இசையமைத்தவர் இசைஞானியாச்சே, சும்மா இருக்குமா.

இந்த நிலையி்ல் அடுத்து சூர்யாவை வைத்து முகமூடி என்ற பிரமாண்டப் படத்தை இயக்கப் போகிறார் மிஷ்கின். இப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடியாம்.

ஆனால் இப்போதைக்கு மிஷ்கின் படத்துக்கு வர முடியாத நிலையி்ல் உள்ளார் சூர்யா. ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்ட ஆதவன், சிங்கம் தவிர அயன் படத்திலும் பிசியாக உள்ளார் சூர்யா.

இதை கருத்தில் கொண்டு முகமூடியைக் கையில் எடுப்பதற்கு முன்பாக குட்டியாக ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். அனேகமாக இந்தப் படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிப்பதில் எக்ஸ்பர்ட் மிஷ்கின். அதேசமயம், படத்தில் சத்து நிறையவே இருக்கும் என்பதால், பிரசன்னாவை வைத்து அவர் கொடுக்கப் போகும் படம் இப்போதே எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X