'சைக்யாட்ரிஸ்ட்' நதியா!

By Staff

Nadhiya
இன்னும் இளமையுடன் கலக்கலாக நடித்துக் கொண்டிருக்கும் நதியா, தனது புதிய படத்தில் சைக்யாட்ரிஸ்ட் வேடத்தில் கலக்கப் போகிறார்.

இளம் நாயகிகளே தங்களது மார்க்கெட்டை கட்டுக்கோப்பாகவும், பத்திரமாகவும் பார்த்துக் கொள்வதில் படாதபாடு பாட்டு வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்து நாயகியான நதியாவின் மார்க்கெட்டோ படு ஹாயாக, ஜாலியாக, பிசியாக இருக்கிறது.

கல்யாணமாகி, கணவர், குழந்தையுடன் செட்டிலான நதியா, பெரிய இடைவெளிக்குப் பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் நடிக்க வந்தார். நடித்தது என்னவோ அம்மா வேடம்தான். ஆனால் நாயகி ஆசினுக்கு இணையான காட்சிகள் வைக்கப்பட்டது நதியாவுக்கு.

அது தவிர தாமிரபரணியிலும் அவருக்கு அழுத்தமான பாத்திரம்தான். சண்டை படத்திலோ, நாயகியை விட நதியாவுக்குத்தான் ரொம்ப முக்கியம் தந்திருந்தார்கள். ஹீரோயினுக்கு இணையாக கலக்கியிருந்தார் அப்படத்தில்.

அன்றைய இளமை இன்னும் மிச்சமிருக்கும் நதியாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களை படு கவனமாக செலக்ட் செய்கிறார் நதியா. தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஸாரி சொல்லி விடுகிறாராம்.

தற்போது லிங்குச்சாமியின் திருப்பதி பிரதர்ஸ், தயாரிக்கும் பட்டாளம் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நதியா. இதில் அவர் பள்ளித் தாளாளாகவும், சைக்யாட்ரிஸ்டாகவும் வருகிறாராம். சிறப்பாக நடிக்க நல்ல வாய்ப்பு என்பதால் இந்த கேரக்டரை விரும்பி ஏற்றுள்ளாராம் நதியா. புதுமுக இயக்குநர் ரோஷன்குமார் படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X