மும்பையில் செட்டிலாகும் நதியா

ஒரு காலத்தில் ஓஹோவென ஹீரோயினாக கலக்கியவர் நதியா. தமிழ், மலையாளம் என மாறி மாறி பிசியாக நடித்துக் கொண்டிருந்த நதியா, பின்னர் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு ஜெயம் ரவியின் அம்மாவாக எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. நதியாவின் அம்மா நடிப்பும் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து அம்மா, அக்கா, அண்ணி, மாமியார் என பல ரோல்கள் அவரைத் தேடி வந்தன. ஆனால் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் நதியா.
அதன் அடிப்படையில் தாமிரபரணியில் வில்லத்தனம் கலந்த அம்மா வேடத்திலும், சண்டை படத்தில் சுந்தர்.சிக்கு மாமியார் ரோலிலும் கலக்கினார். குறிப்பாக சண்டை படத்தில் அவரது இளமையான மாமியார் கேரக்டருக்கு செமத்தியான வரவேற்பு.
இப்போது நதியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் பேசாமல் மறுபடியும் இந்தியாவிலேயே செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார் நதியா.
ஆனால் சென்னையிலோ அல்லது தாயகமான கேரளாவிலோ செட்டிலாகாமல் மும்பையில் குடியேறத் தீர்மானித்துள்ளாராம் நதியா.
ஒரு வேளை ஆசின் மூலமாக இந்தி வாய்ப்பையும் எதிர்பார்க்கிறாரோ?


Click it and Unblock the Notifications











