ஷா.. எல்லாம் வித்யாவுக்காக!

By Staff

Vidya Balan
வித்யாபாலனுடன் இணைகிறார் நசிருதீன் ஷா-வெயிட் குறைத்து டிரிம் ஆனார்

இஷ்கியா என்ற படத்தில் வித்யாபாலனுடன் இணைந்து நடிக்கும் பழம்பெரும் நடிகர் நசிருதீன்ஷா, இளமைத் தோற்றத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக தனது டிரேட் மார்க் தாடியை நீக்கி விட்டார். எடையையும் குறைத்து விட்டார். தலைமுடியையும் டை அடித்து கருப்பாக்கி டிரிம் ஆகி விட்டார்.

இதுவரை தனது நரைத்த தலைமுடுடிக்கு டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வந்தவர் நசிருதீன் ஷா. ஆனால் வித்யாபாலனுடன் நடிப்பதற்காக இந்த கொள்கையை சற்று தளர்த்தி இளைஞராகியுள்ளார்.

இப்போது அவரைப் பார்ப்பதற்கு 40 வயதுக்காரர் மாதிரியே இருக்கிறது.

இதெல்லாம் வித்யா பாலனுக்காகத்தான் என்கிறார் சிரிப்புடன் ஷா. அதுகுறித்து அவர் கூறுகையில், உண்மைதான். இந்தப் படத்தில் நான் 40 வயது நபராக வருகிறேன். அதுவும் நாட்டி பேர்வழியாக வருகிறேன். பக்கத்து வீட்டில் வசிக்கும் விதவைப் பெண்ணான வித்யா பாலனை என் வலையில் வீழ்த்தும் சில்மிஷ கேரக்டர் எனக்கு.

படத்தில் என்னுடன் அர்ஷத் வர்ஷியும் இருக்கிறார். இவர்களுக்கு போட்டியாக நானும் கலக்க வேண்டாமா. அதனால்தான் இந்த கெட்டப் சேஞ்ச்.

நிஜ வாழ்க்கையில் நான் இப்படியெல்லாம் இருந்ததில்லை. ஆனால், வித்யாவுக்காக, இந்தப் படத்திற்கு நான் எனது கொள்கைகளை தியாகம் செய்து இறங்கி வந்துள்ளேன்.

இதையெல்லாம் செய்து விட்டுப் பார்த்தபோது புத்துணர்ச்சி கிடைத்தது போல இருந்தது. போன வயது திரும்பி வந்து விட்டதைப் போல உணர்ந்தேன். பக்கத்தில் வேறு வித்யா இருக்கிறார், கேட்க வேண்டுமா..என்றார் வெடிச் சிரிப்புடன் ஷா.

ஷாவுடன் நடிப்பது குறித்து வித்யாபாலனும் படு பெருமையாக பேசி வருகிறார். ஷாதான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறும் வித்யா பாலன், ஷாவைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார். நசீர், வித்யா ஜோடி படு அமர்க்களமாக இருப்பதாக செட்டிலும் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X