தசாவதாரம்: அடுத்தபடியாக ..!

தசாவதாரம் எப்போது வரும் என்று குவிஸ் நடத்தி பதிலைக் கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு படத்தின் ரிலீஸ் மற்றும் பாடல் ரிலீஸ் குறித்து பெரும் குப்பம் நிலவி வருகிறது.
படத்தின் ஆடியோ மார்ச் 18ம் தேதி வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இது ஏப்ரல் 2ம் தேதி என்று மாறியது. இப்போது அதுவும் போய் ஏப்ரல் 25ம் தேதி என முடிவாகியுள்ளதாம். நேரு உள்ளரங்க மைதானத்தில் விழா பிரமாண்ட அளவில் நடைபெறவுள்ளதாம்.
தயாரிப்பாளர் கூற்றுபடி, ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் கலந்து கொள்கிறார். முதல் சிடியை அவர் வெளியிடுகிறார். அதை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி ஆகியோர் ஒரு சேர பெற்றுக் கொள்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதியும் விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.
இதற்கிடையே படத்திற்கு தமிழிலும், பிற மொழிகளிலும் சேர்த்து 1500 பிரிண்டுகள் போடப்படவுள்ளதாம். இதன் மூலம் பிரிண்டுகள் அடிப்படையில் ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் ஆகிய படங்களை தசாவதாரம் பீட் செய்துள்ளதாகவும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
படம் எப்ப தலைவா வரும்?


Click it and Unblock the Notifications











