பேரரசுவின் 'திருவண்ணாமலை'

By Staff

Arjun with Nila
ஊர்ப் பெயர்களில் மட்டுமே படம் இயக்கி வரும் பேரரசு, தனது அடுத்த படத்திற்கு திருவண்ணாமலை என பெயர் வைத்துள்ளார். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஊர்ப் பெயர்களை மட்டுமை டைட்டிலாக வைத்து படம் எடுத்து வருகிறார் பேரரசு. சிவகாசி, திருப்பாச்சி, தர்மபுரி, பழனி என அவரது படங்கள் அனைத்துமே ஊர்களின் பெயர்களையே டைட்டிலாக கொண்டவை.

இந்த நிலையில் கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனத்துக்காக திருவண்ணாமலை என்ற படத்தை இயக்கவுள்ளார் பேரரசு. இப்படத்தின் பூஜை எளிய முறையில் நடந்து முடிந்தது.

கவிதாலயா நிறுவன அலுவலகத்தில் பூஜை நடந்தது. திருவண்ணமலையில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தின் மற்ற கதாபாத்திரங்கள், படக்குழுவினர் விவரம் அடுத்த வாரத்தில் முடிவாகிறது.

பரத் நடிப்பில் தற்போது 'திருத்தணி' படத்தையும் பேரரசு தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்து அடுத்த சில வாரங்களில் திருவண்ணாமலையில் தடம் பதிப்பார் என்று தெரிகிறது.

ஏ.வெங்கடேஷின் 'துரை' படத்தில் நடிகர் அர்ஜூனும் மும்முரமாக இருப்பதால், அதை முடித்து விட்டுத்தான் திருவண்ணாமலைக்கு வருகிறார் அர்ஜூன்.

இந்த ஆண்டு கவிதாலயா தயாரிக்கும் 2வது படம் திருவண்ணாமலை. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து குசேலனை தயாரித்து வருகிறது கவிதாலயா. இதுதவிர மேலும் 2 படங்களையும் இந்த ஆண்டு தயாரிக்க கவிதாலயா திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X