'பிரபாகரன்': திருமா, சீமான், சத்யராஜ் எதிர்ப்பு

சிங்கள இயக்குநர் பெரீஸ் இயக்கியுள்ள பிரபாகரன் படத்தின் பிரிண்டுகள் சென்னை ஜெமினி லேபில் போடும் முயற்சி நடந்தது. இதை அறிந்த தமிழர் அமைப்புகள் மற்றும் திரைத்துறையினர் இணைந்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், படத்தின் இயக்குநர் பெரீஸுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
இந்த நிலையில், இப்படத்தை நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் தங்கர்பச்சான், சீமான், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்பட பலர் பார்த்தனர்.
படத்தைப் பார்த்து முடித்து விட்டு வந்த அனைவருமே இப்படம் இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் வகையில் படம் உள்ளது. இது திரையிடப்பட்டால், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
எனவே, இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











