Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழைய மனைவியும் புது மனைவியும்...! - பிரகாஷ் ராஜ்
நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதகுமாரியை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு (ஒரு குழந்தை இறந்துவிட்டது), பாலிவுட் நடன இயக்குநர் போனி வர்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.
சமீபத்தில் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். லலிதகுமாரிக்கும் அவருக்கும் பிறந்த பெண் குழந்தைகள் இருவரும் இப்போது பிரகாஷ்ராஜுடன் வசிக்கின்றனர்.
போனி வர்மாவுடனான புதிய வாழ்க்கை எப்படி உள்ளதென சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் இப்படி எழுதியுள்ளார்:
"புதிதாக திருமணம் ஆனவர்கள் கணவனுக்காக விரதமிருப்பது வடக்கில் பிரபலம் (தில்வாலே துல்ஹனியே லேஜாயேங்கேவில் கஜோல் விரதமிருப்பதைப் போல). என் மனைவி போனியும், எனக்காக தனது ஷூட்டிங்குக்குக் கூடப் போகாமல் நாள் முழுக்க விரதமிருந்தார். இந்த திருமண உறவு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது... அழகாக உள்ளது" என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
தனது பழைய மனைவி லலிதகுமாரி பற்றி கூறுகையில், " எனது குழந்தைகள் இருவரும் என்னுடன்தான் உள்ளனர். என் முன்னாள் மனைவி லலிதகுமாரியும், இப்போதைய மனைவி போனியும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்" என்று எழுதியுள்ளார் பிரகாஷ் ராஜ்.