மீண்டும் ரஜினி-லாரன்ஸ் அதிரடி!

இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர், ரஜினியின் பக்தராக தன்னைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் ராகவா லாரன்ஸ். பாபா படத்தில் மாயா மாயா... பாடலுக்கு ரஜினியை ஆட்டுவித்தவரும் இவரே.
இதோ இப்போது அதே பாணியில் இன்னொரு அதிரடிப் பாடலுடன் வருகிறது ரஜினி-ராகவா லாரன்ஸ் கூட்டணி, குசேலன் படத்துக்காக. ரஜினிக்கென ஸ்பெஷல் மூவ்மெண்டுகளுடன் இந்த நடனத்தை அமைத்திருக்கிறாராம் லாரன்ஸ்.
சிவாஜியில் ரஜினி அழகாகக் காட்டிய பானுதான் இந்தப் படத்திலும் மேக்கப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட போது, தனக்கென அமைக்கப்பட்ட ஸ்டைல் மூவ்மெண்டுகளைக் கண்டு வியந்த ரஜினி, ராகவாவை அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ரஜினி சாருக்கு நடனக் காட்சி அமைப்பது போன்ற இனிய வேலை வேறு எதுவும் கிடையாது. நடன அசைவுகளை அவர் ஒரே நிமிடத்தில் உள்வாங்கிக் கொண்டு ஆடி அசத்துவதாகட்டும், நாம் சொல்லிக் கொடுத்ததை ஒரு புதுப் பரிமாணத்துடன் நம் முன் அவர் செய்து காட்டுவதாகட்டும்... அற்புதம். அவரது எல்லாப் படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல், அவரது உள்ளார்ந்த பாராட்டு... அதற்கு இணையே கிடையாது...என்று நெகிழ்கிறார் ராகவா லாரன்ஸ்.
நடன இயக்குநர் தொழிலை முழுமையாக விட்டுவிட்டு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, சமூகத் தொண்டு என தன் எல்லைகளை விரித்துக் கொண்டுள்ள ராகவா லாரன்ஸ், ரஜினிக்காக மட்டும் நடன இயக்குநராக அவ்வப்போது பணியாற்றுகிறார்.
ரஜினியின் அடுத்த படமான ரோபோவில் இரு பாடல்களுக்கு நடனம் அமைக்கிறாராம் ராகவா. சுல்தான் தி வாரியர் படத்திலும் இவரது பங்களிப்பு உண்டாம்.


Click it and Unblock the Notifications











