மீண்டும் ரஜினி - வாசு?

By Staff

P Vasu
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வாசு மீண்டும் புதிய படம் இயக்குவதாகவும், இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கோலிவுட்டில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி நடிக்க ஏற்கெனவே குசேலன் படத்தை இயக்கி வருகிறார் வாசு. வரும் ஜூலை 25-ம் தேதி இந்தப் படம் உலமெங்கும் 1200 பிரிண்டுகளுடன் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகிது.

இதற்கிடையே டப்பிங் முடிந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரஜினி வாசுவைப் பெரிதும் பாராட்டியுள்ளார். இந்தப் படம் இப்படி வரும் என்று நான் நினைக்கவே இல்லை என வாசுவிடம் கூறியுள்ளார். வாசுவின் ரீமேக் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போன ரஜினி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் வாசுவுக்கே அளித்துள்ளதாகப் பேசப்படுகிறது.

இதுகுறித்து வாசுவிடம் கேட்டோம்.

இப்போதைக்கு ரஜினி சார் நடித்துள்ள குசேலன் படத்தினை வெளியிடும் வேலைகளில் மட்டும்தான் என் கவனமெல்லாம். இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். அவர்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை முழுவதுமாக காப்பாற்றியிருக்கிறேன். படத்தைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

ரஜினி சார் அடுத்தாக ஷங்கர் இயக்கும் ரோபோவில் நடிக்கிறார். அதற்கு முன்பே சவுந்தர்யாவின் சுல்தான் வரப்போகிறது.

இதற்கிடையில் நாங்கள் மீண்டும் படம் செய்கிறோமா அல்லது சுல்தான், ரோபோ முடிந்த பிறகு செய்கிறோமா என்பது எனக்குத் தெரியாது. ரஜினி சார் சொல்வதுதான் இறுதியானது, என்றார்.

ஆக, ரஜினியை வைத்து வாசு இன்னொரு படம் இயக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. எப்போது என்பது மட்டும் இன்னமும் உறுதியாகவில்லையோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X