பிரபுதேவா சொத்துக்களை முடக்க ரம்லத் கோரிக்கை!

நயன்தாராவுடனான கள்ளக் காதல் காரணமாக, மனைவி ரம்லத் மற்றும் இரு குழந்தைகளை பிரிந்து வசிக்கிறார் பிரபுதேவா.
இதனால் தன்னுடன் பிரபுதேவாவைச் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், நயன்தாராவும் பிரபு தேவாவும் இணைந்து நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது என்றும் கோரி இரு தனித்தனி வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பிரபு தேவா தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு, மும்பை அல்லது துபாயில் நயன்தாராவுடன் செட்டிலாகிவிடக் கூடும் என செய்திகள் வருவதால், அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் விற்க முடியாத அளவுக்கு முடக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ரம்லத். இதனை எழுத்துப்பூர்வ மனுவாக தனது இரண்டாவது வழக்கில் சேர்த்துள்ளாராம்.
இதனால், பிரபு தேவா பெரும் கோபத்திலிருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications