ஸ்டெபி மீது ஆசிட் வீசுவதா என் வேலை?-சீமான் கோபம்

By Staff

Stephy and Raguvannan
நான் தூக்கி வளர்த்தி பிள்ளை ரகுவண்ணன். அவர் மீது அவதூறு பேசியதோடு, என்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார் ஸ்டெபி. அவர் மீது ஆசிட் ஊற்றுவதுதான் என் வேலையா என்று இயக்குநர் சீமான் கோபமாக கூறியுள்ளார்.

ரகுவண்ணன் தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக புயலை கிளப்பியுள்ளார் உதவி இயக்குனர் ஸ்டெபி. மேலும், அவரது தந்தை மணிவண்ணன், இயக்குநர் சீமான், அவரது தம்பி நாகேந்திரன் ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும், சீமானும், நாகேந்திரனும் தன் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டுகின்றனர் என்றும் புகார் கொடுத்துள்ளார்.

ரகுவண்ணனுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களை வேறு ஒருவரோடு இருப்பது போல கிராபிக்ஸ் செய்வதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதுகுறித்து கூடுதல் துணை கமிஷனர் முத்தமிழ் மணி, ஸ்டெபியிடம் விசாரணை நடத்தியுள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி ரகுவண்ணனுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்டெபி கூறியுள்ள புகார்களை சீமான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மணிவண்ணன் குடும்பத்தில் நானும் ஒருவன். ரகுவண்ணனை நான் தூக்கி வளர்த்தவன். என்னுடைய தம்பி படத்தில் ரகு உதவி இயக்குனராக இருந்தார்.

விஷூவல் கம்யூனிகேஷன் மாணவியான ஸ்டெபி, ரகுவுடன் நெருங்கி பழகினார். தோழி என்ற ரீதியில் அவரது வீட்டுக்கு சென்ற ரகு, ஸ்டெபியின் குடும்பத்துடன் நன்றாக பழகினார். பணம் பறிக்கும் நோக்கத்தில் ஸ்டெபியை ரகுவுடன் அவரது குடும்பத்தினர் பழக விட்டனர்.

ஆனால் ஸ்டெபியின் நடவடிக்கைகள் தவறாக இருப்பதை பார்த்த ரகு அவருடனான பழக்கத்தை நிறுத்திவிட்டார்.

ஸ்வீட் மெமோரிஸ் என்று சொல்லி ரகுவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோவை காண்பித்து திருமணம் நடந்துவிட்டதாக கூறி மணிவண்ணனின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபடுகிறார் ஸ்டெபி. ஒரு வீட்டில் மருமகளாக வாழ நினைக்கும் பெண் இப்படி நடந்து கொள்வது பெண் இனத்துக்கே இழிவு.

எங்களுக்கு படம் எடுக்கும் வேலை இருக்கிறது. இவரது முகத்தை வைத்து கிராபிக்ஸ் செய்வதும், ஆசிட் வீசுவதுமா எங்கள் வேலை. அவரது அப்பா குடிபோதையில் என்னை ஆபாசமாக பேசியதை போலீஸ் விசாரணையில் சொல்வேன் என்றார் சீமான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X