இன்று இரவு பஹாமாஸுக்கு ஹனிமூன் கிளம்புகிறார் ஷில்பா

லண்டனைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், ஷில்பாவுக்கும் சமீபத்தில் மும்பையில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஜோடியாக திருப்பதி வந்து அங்கு ஏழுமலையானை வழிபட்டார் ஷில்பா. அவருடன் ஷில்பாவின் அம்மா, தங்கை ஷமீதா ஷெட்டி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
திருப்பதியில் கணவருடன் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார் ஷில்பா.
பின்னர் குந்த்ரா - ஷில்பா ஜோடிக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதம், லட்டு கொடுக்கப்பட்டது.
தரிசனத்திற்குப் பின்னர் வெளியில் வந்த ஷில்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நானும் எனது கணவரும் இன்று இரவு தேனிலவுக்காக அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் தீவுக்கு செல்கிறோம். அங்கு 2 வாரம் வரை தங்குவோம்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில்தான் குடும்பம் நடத்தப் போகிறோம்.
ராஜ் குந்த்ரா என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். அவரை மணந்தது பாக்கியமாக கருதுகிறேன். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடு வரவும் வாய்ப்பே இல்லை என்றார் ஷில்பா.


Click it and Unblock the Notifications











