'மாமியாரா வரட்டுமா?'-சிம்ரன்

ரஜியின் வெற்றிப் படமான 'மாப்பிள்ளை'யை ரீமேக் செய்கிறார் அவரது நிஜ மாப்பிள்ளை தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் மாமியாராக நடிக்க பல நடிகைகளிடம் பேசிப் பார்த்து, கடைசியில் ஸ்ரீதேவியை ஓகே செய்துள்ளனர்.
அதற்கு முன் சிம்ரனிடம் இந்த வேடத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விஷயம் தனக்கு இப்போதுதான் தெரியும் என்றும், தனுஷுக்கு மாமியாராக நடிக்க தனக்கு சம்மதமே என்றும் கூறியுள்ளார்.
"என்னைச் சுற்றி இப்படித்தான் சம்பந்தமே இல்லாதவர்கள் குழப்பம் விளைவித்துவிடுகிறார்கள். என்னிடம் இது தொடர்பாக யாரும் பேசவே இல்லை. ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டதாக அதற்குள் செய்தி கசியவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது?" என்கிறார் வருத்தத்துடன் சிம்ரன்.
என்ன செய்வது... 'முற்பகல் செய்யின்...' பழமொழியை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் அம்மணி!.


Click it and Unblock the Notifications











