ஜனவரி 8ம் தேதி இந்தி சிவாஜி ரிலீஸ்!

By Staff

Sivaji
தமிழ் சினிமாவில் பல புதிய சாதனைகள் படைத்த ரஜினியின் சிவாஜி - தி பாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 8-ம் தேதி இந்தியில் வெளியாகிறது.

ரஜினி- ஸ்ரேயா ஜோடியாக நடித்த இந்தப் படம் 2007 ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக ரிலீசாகி வெற்றி பெரும் வெற்றி பெற்றது.

உலகம் முழுவதும் இப்படம் 1000 தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.400 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

100 திரையரங்குகளுக்கு மேல் நூறாவது நாள் கண்ட சிவாஜி, வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது.

சிவாஜியை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட 2007-ம் ஆண்டே ஏவி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாக கூறினார்கள்.

ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

தமிழைப் போலவே இந்தப் படம் இந்தியிலும் வசூலைக் குவிக்கும் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள். எனவே அதிக பிரிண்ட் போட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்கிறார்களாம்.

ஏற்கெனவே சந்திரமுகி படம் இந்தியில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்தப் படம் இந்தியில் போகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X