பொதுவாக எம் மனசு தங்கம்... பாடலில் சுந்தர் சி!

கலைஞர் தொலைக்காட்சி சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், ஒரிஜினல் முரட்டுக் காளையில் இடம்பெற்ற 'பொதுவாக எம்மனசு தங்கம்…' பாட்டையும் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
இந்தப் படத்தைச் செய்யவேண்டும் என கடுமையாக முயற்சித்த விஜய்க்கு கடைசிவரை கிடைக்காத அனுமதி, சுந்தர்.சிக்கு கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தை இயக்குநர் அமிர்தத்தின் மகன் குணாநிதி, கலைஞர் டிவிக்காக தயாரிக்கிறார். விஜய் நடித்த ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய் படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்குகிறார்.
சினேகா மற்றும் சமிக்ஷா இருவரும் இந்தப் படத்தில் நாயகிகள். ஒரிஜினல் முரட்டுக்காளையில் ரதி நடித்த வேடம் சினேகாவுக்கும், சுமலதா நடித்த வேடம் சமிக்ஷாவுக்கும் தரப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சுந்தர் சி அளித்த பேட்டி:
எனக்குத் தெரிந்து ஒரு நல்ல க்ளாஸிக் ஆக்ஷன் படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் நடித்த முரட்டுக்காளைதான்.
இப்போது பார்த்தாலும் அந்தப் படத்தில் ரஜினி சாரின் வேகமும் ஸ்டைலும் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் இந்தப் படத்தை நான் செய்யக் காரணம்.
பொதுவாக எந்தப்படத்தையும், இதை நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ரகமில்லை நான். ஆனால் முதல்முறையாக நானே விரும்பி நடிக்கிற படம் முரட்டுக்காளைதான் என்றார்.


Click it and Unblock the Notifications











