பிரெஞ்ச் படத்துக்கு கேன்ஸ் விருது

By Staff

கேன்ஸ்: கேன்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை 'தி கிளாஸ்' என்ற பிரெஞ்ச் மொழி படம் வென்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அப்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த படத்துக்கான பால்மே டி ஆர் விருதை லாரென் கான்டி என்ற இயக்குநரின் 'தி கிளாஸ்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படம் தட்டிச் சென்றது.

கடந்த 1987ல் 'அண்டர் சாத்தான்'ஸ் சன்' என்ற பிரெஞ்ச் மொழி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இந்த விருதைப் பெரும் பிரெஞ்ச் மொழிப்படம் என்ற பெருமையையும் தி கிளாஸ் பெற்றுள்ளது.

இதில் நடிகர் பிராங்காய்ஸ் பேகாதூ கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தில் அவர், புறநகர் பள்ளியில் வேலைபார்க்கும் ஒரு பிரெஞ்ச் மொழி ஆசிரியர் பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த ஆசிரியரின் நினைவுகளே படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு இடையிலான இன, மொழி பேதங்கள், பருவ வயது பிரச்னைகள், அவர்களது நியாய தர்மங்கள் பற்றி ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும்.

இந்த படத்தில் உண்மையான மாணவர்களை நடிக்க வைத்திருந்தனர். இதில் 25 மாணவர்கள் கேன்ஸ் விருது வழங்கும் விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து வந்த நடிகர் பிராங்காய்ஸ், விழா மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவிடம் விருதைப் பெற்றார்.

முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளன்று தி கிளாஸ் திரையிடப்பட்டது. சிறந்த படத்துக்கான விருதை இந்த படத்துக்கு நடுவர்கள் அறிவித்தபோது சினிமா விமரிசகர்களும், ரசிகர்களும் ஒருமித்து பாராட்டினர்.

காலத்தை வென்று நிற்கும் போதனையாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்துக்கு தேசம், மொழி ஆகிய வரம்புகள் இல்லை. நல்ல கல்வித்தரத்துக்கான ஒரு தேடுதலாக இந்த படத்தின் கரு உள்ளது என்று விழாக்குழு நடுவராக இருந்த நடிகர் ஷான் பென.

பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய வால்டர் சால்ஸின் 'வால்ட்ஸ் வித் பஷீர்' என்ற அனிமேஷன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

கேன்ஸ் விழாவின் இறுதிநாளன்று திரையிடப்படும் படங்கள்தான் விருதுகளைத் தட்டிச் செல்லும் என்ற விமரிசனம் இந்தாண்டும் பலித்தது பலருக்கு ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X