ஏழுமலையான் பாடல்கள்... இசையமைப்பாரா ரஹ்மான்?

திருமலை தெய்வம் ஏழுமலையானைப் புகழ்ந்து இசையமைப்பாளர்கள், பாடகர்- பாடகிகள் பலர் பாடல்கள் பாடி உள்ளனர். பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் ஏழுமலையான் பற்றி 5 பாடல்கள் பாடி இருந்தார். இன்னும் அவர் 2 பாடல்கள் பாட வேண்டியுள்ளது. அதன் பிறகு அதை ஒரு ஆல்பமாக வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்மதம் கோரி ரஹ்மானிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும், விரைவில் அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்துவாக இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர் ரஹ்மான். பாய்ஸ் படத்தில் ஐயப்பனைப் புகழ்ந்து பாடப்படும் பாடலுக்கு தனது உதவியாளர் பிரவீண் மணியை வைத்துதான் அவர் இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏழுமலையானைப் புகழ்ந்து பாட ஒப்புக் கொள்வாரா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











