வல்லமை தாராயோ ஒத்திவைப்பு!

கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் ஜூன் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இதையடுத்து புதுமுக இயக்குநர் மதுமிதாவின் முதல் இயக்கத்தில், பார்த்திபன், சாயா சிங் நடிப்பில் உருவாகியுள்ள வல்லமை தாராயோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ஜூன் 20ம் தேதி படம் வெளியாகும் என மதுமிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து மதுமிதா கூறுகையில், தசாவதாரம் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவேதான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம் என்றார் மதுமிதா.
சில நாட்களுக்கு முன்பு வல்லமை தாராயோ படத்தின் பிரிவியூ ஷோ நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரும் படம் சிறப்பாக வந்திருப்பதாக மதுமிதாவைப் பாராட்டினார். இதனால் குஷியாகியுள்ளார் மதுமிதா.
Comments


Click it and Unblock the Notifications