தமிழ் '3 இடியட்ஸ்'-3 பேர் ரெடி?

By Sudha

3 Idiots
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருப்பதாக கூறப்படும் 3 இடியட்ஸ் படத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக பேச்சு அடிபடுகிறது.

இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் உருவான படம் 3 இடியட்ஸ். இதில் 3 நாயகர்களில் ஒருவராக மாதவனும் இடம் பிடித்திருந்தார். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். ஷங்கர் இயக்குவதாக தெரிகிறது. இதற்கான நாயகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். இப்போதைக்கு விஜய், மாதவன், சிம்பு என மூன்று பேர் தமிழுக்கு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்குப் பதிப்பில் விஜய்க்குப் பதில், மகேஷ் பாபு நடிப்பாராம். மற்ற இருவர் சிம்பு மற்றும் மாதவனாக இருப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்தியில் பொமன் இரானி நடித்த வேடத்தில், தமிழில் சத்யராஜ் நடிக்கவுள்ளாராம்.

இருப்பினும் தமிழ் 3 இடியட்ஸில் தான் நடிக்கவில்லை என்று மாதவன் கூறி வருவதால், தமிழ் 3 இடியட்ஸ் நாயகர்கள் யார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X