விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் 2008'

By Staff

Nikkil Mathew, winner of VIJAY - Airtel Super Singer Junior
சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகியவற்றைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் 2008 நிகழ்ச்சிக்கு ரெடியாகி விட்டது விஜய் டிவி.

ஏர்டெல் சூப்பர்சிங்கர் போட்டியில் நிகில் மேத்யூவும், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தியும் வெற்றியாளர்களாக உருவெடுத்தனர். இவர்களில் நிகில் மேத்யூ, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பீமா படத்தில் குரல் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் பாடிய எனது உயிரே சூப்பர் ஹிட் பாடலானது.

அதேபோல ஜூனியர் கிருஷ்ணமூர்த்தி பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிசியானார்.

இதைத் தொடர்ந்து வருகிறது சூப்பர் சிங்கர் 2008. தமிழகத்தின் சிறந்த குரலைத் தேர்ந்தெடுக்கும் இந்த டேலன்ட் வேட்டையில் 16 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்று தங்களது குரல் வளத்தைக் காட்டலாம்.

இசைத் துறையில் பிரபலமான நடுவர்கள் தமிழகத்தின் சிறந்த குரலை, 2008ம் ஆண்டின் சூப்பர் சிங்கரைத் தேர்வு செய்ய காத்துள்ளனர். இதில் வெற்றி பெறுபவருக்கு முன்னணி இசையமைப்பாளரின் இசையில் பாடும் வாய்ப்பும் காத்திருக்கிறது.

இதில் பங்கேற்க செய்ய வேண்டியது:

வயது 16 வயதுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். தங்களது குரலில் பாடல் ஒன்றை சிடி அல்லது கேசட்டில் பதிவு செய்து,

Vijay TV
THE EXECUTIVE PRODUCER
Airtel Super Singer 2008
P.O.Box No: 8484
Chennai - 600 034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அல்லது http://www.vijay.indya.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் தங்களது குரலையும், முழுமையான தகவல்களையும் பதிவு செய்யலாம்.

இதுதவிர ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 54321 2727 என்ற எண்ணுக்கு தங்களது மொபைல் போனிலிருந்து அழைத்து குரலைப் பதிவு செய்யலாம்.

குரல் பதிவு கோவை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் மே மாதம் நடைபெறும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X