twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேரனை ஒப்படைக்க மறுத்த விஜயகுமார்-தந்தையுடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி

    By Sudha
    |

    Vijayakumar and Vanitha
    சென்னை: வனிதாவின் மூத்தமகன் விஜயஸ்ரீஹரியை அவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், ஒப்படைக்க மறுத்துள்ளார் நடிகர் விஜயகுமார். செகந்திராபத்திலிருந்து ஹரியுடன் வந்த விஜயக்குமாரிடமிருந்து மகனைப் பிடுங்க முற்பட்டார் வனிதா. இதையடுத்து இருவருக்கும் இடையே விமான நிலையத்தில் வைத்து பயங்கர சண்டையாகி விட்டது. போலீஸார் தலையிட்டு சிறுவனை மீட்டு வனிதாவிடம் மாமியாரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

    இரவில் நடந்த இந்த கடும் அடிதடி, மோதலால் விமான நிலையமே அல்லோகல்லப்பட்டுப் போனது. ஏராளமானோர் கூடி நின்று இந்த குடும்பச் சண்டையை வேடிக்கை பார்த்தனர்.

    நீதிமன்ற உத்தரவுப்படி, விஜய்ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க போலீசார் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், சமாதான முயற்சியில் மட்டும் தீவிரமாக இருந்தனர். அவ்வப்போது எங்கிருந்தோ உத்தரவுகள் அவர்களுக்கு வந்தவண்ணம் இருந்ததாக வனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

    நடிகர் விஜயகுமாருக்கும் 2வது மனைவி மஞ்சுளாவுக்கும் பிறந்த மகள் நடிகை வனிதா. வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகாஷைக் கண்டித்ததோடு, 2 வாரத்திற்குள் நடிகை வனிதாவிடம் ஸ்ரீஹரியை ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 23-ந் தேதி ஆகாஷுக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், நடிகர் விஜயகுமார் தனது பேரன் ஸ்ரீஹரியுடன் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 10.15 மணிக்கு சென்னை வந்தார். இதுபற்றிய தகவல் ஏற்கனவே தெரிந்ததால், நடிகை வனிதா தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் விமான நிலையத்துக்குச் சென்றார்.

    விமான நிலைய கட்டடத்துக்குள்ளிருந்து பேரன் ஸ்ரீஹரியுடன் விஜயகுமார் வெளியே வந்த போது, நடிகை வனிதா விரைந்து சென்று, ஸ்ரீஹரியை அவரிடம் இருந்து இழுத்தார். எனது மகன் ஸ்ரீஹரி என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவிட்டு இருக்கிறது. எனவே அவனை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அவனை தன் பக்கம் இழுத்தார்.

    வனிதா கதறல்..

    ஆனால் விஜயகுமார் ஸ்ரீஹரியை விட மறுத்தார். விமானத்தில் இருந்து இறங்கி விஜயகுமார், ஸ்ரீஹரியுடன் வெளியே வந்தார். அப்போது வனிதா, ம‌கனை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுடி அவனை தன்னுடன் அனுப்பி வைக்கும்படியும் ‌விஜயகுமாரிடம் கேட்டார். ஆனால் பேரனை ஒப்படைக்க மறுத்து விட்டார் விஜயகுமார். ஸ்ரீஹரியை கட்டியணைத்துக் கொண்ட விஜயகுமார், வனிதா கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் ஒப்படைக்க மறுத்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சிறுவன் ஸ்ரீஹரியின் கையை பிடித்து வனிதா இழுத்தார். விஜயகுமாரோ, சிறுவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மோதல் கைகலப்பாக மாறியதை பார்த்த சிறுவன் ஸ்ரீஹரி கதறி அழுதான். மகன் அழுவதை பார்த்த வனிதாவும் அழுதார். விஜயகுமாரிடம் இருந்து மகனை எப்படியாவது மீட்டுக் விட வேண்டும் என ‌போராடினார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் ‌பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

    போலீஸ் அழைத்துச் சென்றது...

    அப்போது அங்கு வந்த போலீசார் சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து விஜயகுமாரும், வனிதாவும் ‌போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். போலீசார் சமாதானம் பேச முயன்றனர்.

    ஆனால் போலீசாரின் சமாதானத்தை ஏற்காத வனிதா, "என்னிடம் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. சட்டப்படி அவனை என்னுடன் அனுப்பி வையுங்கள். இதில் சமாதானம் பேச என்ன இருக்கிறது?" என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததுடன், யாரிடமோ இந்த விவகாரம் குறித்து சீரியஸாக பேசிக் கொண்டிருந்தனர்.

    இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வனிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பெற்ற மகனை என்னுடன் அனுப்பி வைக்க இப்படி மறுக்கிறார்களே. சட்டப்படி குழந்தை என்னிடம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றமே இருமுறை உத்தரவிட்டும் இப்படி அக்கிரமம் செய்கிறார்களே... இது நியாயமா? தாயுடன் மகனை சேரவிடாமல் தடுப்பதைக் கேட்க நாதியில்லையா?" என்றார் கண்ணீருடன்.

    போலீஸாரை கடுமையாக திட்டிய வனிதா

    போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தபோது போலீஸாரை கடுமையாக சாடிப் பேசினார் வனிதா. பெண் போலீஸ்காரரை அவள் இவள் என்று ஏக வசனத்தில் பேசினார். போலீஸாரையும் வாடா, போடா என்று ஒருமையில் பேசினார் இதனால் மேலும் பரபரப்பு அதிகமானது.

    இரு தரப்பும் பிடிவாதமாக இருந்ததால், குழந்தையின் தந்தை ஆகாஷின் தாயாரை வரவழைத்து அவரிடம் குழந்தையை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர் போலீஸார்.

    English summary
    Despite of court orders, Actor Vijayakumar refused to handover Vanitha"s elder son Vijay Shri Hari to Vanitha. Yesterday the dispute between the actor and his daughter went to awkward situation. When Vijayakumar arrived with Sri Hari at Chennai airport from Hyderabad, Vanitha rushed to get her son back. But Vijayakumar grabbed Sri Hari and refused to obey the court orders.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X