அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
பிஆர்ஓக்களின் செய்திகளையும் மீறி பரபரப்பாகப் பேசப்படுபவை ரஜினியின் படங்கள் மட்டுமே. இப்போது பாலாவின் அவன் இவனும் இந்தப் பரபரப்பு வெளிச்சத்தில்!
இத்தனை நாட்களாக பொத்திப் பொத்தி வைத்திருந்த அவன் இவன் படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பற்றிய செய்தி ஒன்று, படத்தின் பர்பெக்ஷனுக்கு எந்த அளவு பாலாவும் படத்தின் நடிகர்களும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கும்.
முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் முழு க்ளைமாக்ஸையும் படமாக்கியுள்ளார் பாலா. இதற்காக தொடர்ந்து 6 நாட்கள் தண்ணீருக்குள்ளேயே கிடந்திருக்கிறார் விஷால்.
தண்ணீருக்குள்ளிருந்த கட்டைக் குச்சிகள் குத்தி, நகங்கள் கிழிந்து, தோல் வெளுத்துப் போய் அவதிப்பட்டாலும், காட்சி சிறப்பாக வர அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டாராம்.
இவர் மட்டுமல்ல... ஒட்டு மொத்த படக்குழுவும் இத்தனை சிரமங்களையும் எதிர்கொண்டு, அந்த க்ளைமாக்ஸை முடித்திருக்கிறார்கள்!


Click it and Unblock the Notifications











