தனுஷ் நாயகி: ஸ்ருதிக்கு பதில் அமலா பால்?

கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்குறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்த செய்திகள் காற்றுவாக்கில் பரவி வருகின்றன.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்தான். அவர் தேதி கொடுத்ததை சில ஆங்கில பத்திரிகைகளுக்கு தெரிவித்துமிருந்தார் ஐஸ்வர்யா.
ஆனால் தெலுங்கில் நிறைய கமிட்மெண்டுகள் இருப்பதால் இப்போதைக்கு இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள முடியாது என இப்போது கூறிவிட்டாராம் ஸ்ருதி.
இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இப்போதைய சென்சேஷனான அமலா பாலிடம் ஐஸ்வர்யா பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமலா பால் கூறுகையில், "தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. உறுதியானதும் நானே பேசுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











