பிக் பாஸ் ஷோவுக்குத் தடையா?- எதிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்!

இதனால் பிக் பாஸ் 3 போட்டிக்குத் தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதற்குத் தடை விதிக்கக் கூடாது என்று முதல் இரண்டு பிக் பாஸ் போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கோரியுள்ளனர்.
சம்பவனா சேத் கூறுகையில், பிக் பாஸ் 3 நல்ல பொழுதுபோக்கைத் தருகிறது. ஆனால் கொஞ்சம் ஸ்லோவாக உள்ளதாக தெரிகிறது. வேகத்தை அவர்கள் கூட்ட வேண்டும். வரும நாட்களில் அது சூடு பிடிக்கும் என கருதுகிறேன்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டவள் என்ற முறையில், இது போட்டியாளர்களுக்கு நல்ல பிரபலத்தைத் தருகிறது. நல்ல பிரபலங்களால் இந்த நிகழ்ச்சிக்கும் நல்ல பிரபலம் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் எந்தவிதமான ஆட்சேபனையான விஷயங்களும் இல்லை. உண்மையில் பிக் பாஸ் 2ல்தான் அவர்கள் கூறுவது போல ஆபாசம், அர்ச்சனை பேச்சுக்கள், நிர்வானம் உள்ளிட்டவை இருந்தன. அவர்கள் அதைத்தான் தடை செய்திருக்க வேண்டும் என்றார்.
இதேபோல காஷ்மீரா ஷா, ரூபாலி கங்குலி உள்ளிட்டோரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தடை செய்யக் கூடாது என்று கோரியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











