twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் மாரத்தான்-நடிகை சினேகா பங்கேற்றார்

    By Sudha
    |

    Sneha
    தமிழ் மையம் என்ற அமைப்பின் சார்பில் 8000 ஏழைக் குழந்தைகளின் கல்வி உதவிக்காக இன்று சென்னையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.

    திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் (21 கிலோ மீட்டர்), அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் 7 கிலோ மீட்டர் ஓட்டம், மாற்றுத் திறனாளிக்கான வீல் சேர் ஓட்டம் (500 மீட்டர்) ஆகிய 4 பிரிவுகளில் போட்டி நடந்தது. முதலில் ஆண்களுக்கான மினி மராத்தான் பந்தயம் நடந்தது. இதில் 1,800 பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன், நடிகை சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டிரம்ஸ் சிவமணியின் இசையுடன் அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம், சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், வேளாங்கண்ணி சர்ச் வழியாக சென்று அதே வழியாக திரும்பி வந்தனர். அதை தொடர்ந்து பெண்களுக்கான மினி மராத்தான் நடந்தது.

    3-வதாக அனைத்து பிரிவினருக்கான 7 கிலோ மீட்டர் தூர ஓட்டம் நடந்தது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பந்தயம் அண்ணா சதுக்கத்தில் தொடங்கி கண்ணகி சிலை, திருவல்லிக் கேணி, பல்லவன் போக்குவரத்து சிக்னல், சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது.

    21 கிலோமீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த முகேந்தர் சந்தோஸ் 3 லட்சத்தை தட்டிச் சென்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X