இரண்டே நாளில் சிரஞ்சீவிக்கு சிக்கல்!

இதே பெயரில் 4 மாதங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்துள்ள கடப்பாவைச் சேர்ந்த சிகே ரெட்டி என்பவர் தனது கட்சியின் பெயரை சிரஞ்சீவி பயன்படுத்துவது சட்ட விரோதமானது என கூறியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் கமிஷனும் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, நான்கு மாதங்களுக்கு முன்பே தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்துவிட்ட ரெட்டி, அதை முறையாக தேர்தல் கமிஷனுக்கும் அறிவித்துவிட்டார். இப்போது அவர் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை ரெட்டியின் கட்சிதான் பிரஜா ராஜ்யம். சிரஞ்சீவி இந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது.
ஒருவேளை ரெட்டி தன் விண்ணப்பத்தை வாபஸ் வாங்கினால் மட்டுமே சிரஞ்சீவி 'பிரஜா ராஜ்யம்' பெயரைப் பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இந்த விளக்கத்தை சிரஞ்சீவிக்கும் அனுப்பியுள்ளது கமிஷன்.
இப்போது ரெட்டியைச் சமாதானப்படுத்தி பிரஜா ராஜ்யத்தை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் சிரஞ்சீவி ஆதரவாளர்கள்!


Click it and Unblock the Notifications











