தண்டபாணி 'காரு' ஆனார்!

காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக, மிரட்டல் கேரக்டரில் நடித்து தமிழுக்கு புது வில்லனாக வந்து வாய்த்தார் திண்டுக்கல்லைச் சேர்ந்த தண்டபாணி.
அதன் பின்னர் தண்டபாணியை எல்லோரும் சேர்ந்து முழு நேர வில்லனாக்கி விட்டார்கள். ஆனால் எல்லா படத்திலும் ஒரே மாதிரியாக வசனம் பேசி நடித்து வந்தார் தண்டபாணி.
இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தண்டபாணிக்கே கூட கடுப்பாகி விட்டது. என்னங்கடா இது இப்படி ஒரே மாதிரியாகவே நடிக்க வைக்கிறாய்ங்க என்று சலித்துப் போன தண்டு, இப்போது தெலுங்குக்குத் தாவி விட்டார்.
தெலுங்குப் பக்கம் வில்லன்களுக்கு கொஞ்சம் பஞ்சம் என கேள்விப்பட்டு அங்கு போனவருக்கு இப்போது செம மார்க்கெட். வித்தியாசமான முகத்துடன், விகாரமான குரலுடன் தண்டபாணி இருப்பதால், பிசியாகி விட்டார் தெலுங்கில்.
ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் சம்பளம் என பிளாட் ரேட்டில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் தண்டபாணி.


Click it and Unblock the Notifications











