இயக்குனர் முருகதாஸ் கைது

தமிழில் சூர்யா-ஆசினை வைத்து கஜினியை இயக்கிய இவர், அதை இப்போது அமீர் கான்-ஆசின் நடிப்பில் இந்தியில் டைரக்ட் செய்து வருகிறார்.
ஆனால், இந்தியில் இந்தப் படத்தை உருவாக்குவது குறித்து ஒரிஜினல் (தமிழ்) தயாரிப்பாளரான தன்னிடம் எதுவும் கூறாமல் மறைத்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் சந்திரசேகர் சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் படத்தின் உரிமை என்னிடம் இருக்கும் நிலையில் அதை இந்தியில் உருவாக்குவதற்கு உரிய அனுமதியை வாங்காமல், ரீமேக் உரிமைக்குரிய தொகையையும் தராமல் படத்தை இந்தியில் எடுத்து வருகிறார் முருகதாஸ் என சந்திரசேகர் கூறியுள்ளார்.
சந்திரசேகரின் இந்தப் புகாரை பதிவு செய்த சேலம் போலீசார் இன்று முருகதாஸை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
அதுவும் எங்கே தெரியுமா.. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஏதோ மிகப் பெரிய தீவிரவாதியை மடக்கிப் பிடிப்பது போல முருகதாஸை போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











