'தாம் தூம்' ரிலீஸ்!

இப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது ரஷ்யாவில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் ஜீவா. இதனால் படத்ைத முடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. முக்கால்வாசிப் படம் முடிந்து விட்டதால், மீதமுள்ள காட்சிகளை அவரது உதவியாளர் மணிகண்டன் முடித்து வைத்தார்.
இந்த நிலையில் தாம் தூம் இன்று ரிலீஸானது. மறைந்த ஜீவாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இப்படத்தை தியேட்டர்களில் மட்டுமே ரசிகர்கள் பார்க்க வேண்டும் என ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தாம் தூம் படத்தின் திருட்டு விசிடியை கண்டுபிடித்து அவற்றை விற்போரை போலீஸாரிடம் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
படத்தில் லட்சுமி ராயும் இருக்கிறார். ஜெயராம் வில்லன் ரோலில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இதேபோல வினய்-பாவனா- லேகா வாஷிங்டன் நடித்துள்ள ஜெயம்கொண்டான் படமும் இன்றே ரீலிஸாகிறது.
Comments


Click it and Unblock the Notifications