'யோகி'க்கு தடை இல்லை!

யோகிக்கு எந்தத் தடையும் விதிக்கத் தேவையில்லை என்ற நீதிபதி, பருத்தி வீரன் படம் தொடர்பான அத்தனை கணக்குகளையும் ஒப்படைக்குமாறு அமீர் தரப்புக்கு உத்தரவிட்டார்.
பருத்திவீரன் படத்தை ஸ்டுடிடோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா என்பவர் தயாரித்தார். சிவகுமாரின் இன்னொரு மகன் கார்த்திக்கு ஒரு நடிகராக வாழ்க்கை அமைத்துத் தந்த படம் இது.
ஆனால் இந்தப் படத்துக்காக தனக்கு இன்னும் சம்பளமே தரவில்லை என இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அந்த பஞ்சாயத்து இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், அமீர் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கினார். தனது சொந்தக் கம்பெனி மூலம் யோகியைத் தயாரித்து நாயகனாக நடித்தார்.
அதுவரை சும்மா இருந்த பருத்தி வீரன் தயாரிப்பு கோஷ்டி, யோகி ரிலீசாகும் தருணத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பருத்தி வீரன் படத்தை விநியோகித்ததில் அமீர் தங்களுக்கு ரூ.1.53 கோடி பாக்கி வைத்திருப்பதாகவும், அதைக் கொடுத்தால்தான் யோகியை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கு மனுவில் கோரியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
ஆனால் மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். நேற்று முன் தினம் யோகி படமும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, யோகிக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கணக்கு வழக்குகளை அமீர் கோர்ட்டில் தாக்கல் போதும் என்றும் உத்தரவிட்டார்


Click it and Unblock the Notifications











