twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஜெய் ஹோ' எல்லோருக்கும் சொந்தம்.. ஏ.ஆர்.ரஹ்மான்

    By Staff
    |

    AR Rahman
    ஆஸ்கர் விருது வென்ற 'ஜெய்ஹோ...' அனைவருக்கும் பொதுவானது, என்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

    இந்தியாவின் ஏழ்மையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்தவர், ஏ.ஆர்.ரகுமான்.

    அந்த படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஹோ..' பாடலுக்கும் படத்தின் பின்னணி இசைக்கும் 2 ஆஸ்கார் விருதுகள் ரஹ்மானுக்கு கிடைத்தன.

    பிரபலமான அந்த பாடலை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கான உரிமையை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

    நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்துவது குறித்து கேட்கப்பட்டது.

    அந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த ரகுமான், ஜெய் ஹோ பாடல் அனைவருக்கும் சொந்தமானது என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது:

    "எனக்கு கிடைத்த ஆஸ்கார் விருதுகள், இந்திய இசைக்கு அதிக மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளித்து உள்ளது. இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றது உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.

    இந்திய குடிசை பகுதி பற்றி அந்த படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது போல், ஒவ்வொரு நாட்டிலும் இருட்டுப்பகுதிகள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும் போதுதான் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    பொதுவாக இதுபோன்ற படங்களுக்கு இசையமைப்பதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால், உலகின் உயரிய சினிமா விருதை பெற்றுத்தந்த இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக நான் 3 வாரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

    சம்பளத்தைக் குறைத்துவிட்டேன்!

    இந்த படத்தின் ஒலிச் சேர்ப்புக்காக மற்றொரு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து, ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்படும் புளூ என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறேன்.

    வாய்ப்பு, நேரம் கிடைப்பதை பொறுத்து மலையாளப் படங்களுக்கு இசையமைப்பது பற்றி முடிவு செய்வேன். வருங்காலத்தில் அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

    ஆஸ்கார் விருதுக்குப்பிறகு எனது சம்பளத்தை நான் உயர்த்தவில்லை. மாறாக, பொருளாதார மந்த நிலை காரணமாக, சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்துக் கொள்ளும்படி என்னை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    மீண்டும் எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்..., என்றார் ரஹ்மான்.

    பிரமாண்ட இசை நிகழ்ச்சி

    ஆஸ்கார் விருது பெற்றபிறகு, முதன் முறையாக 50-க்கு மேற்பட்ட பிரபலமான இசைக் கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரகுமான் நடத்தும் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சி, மே மாதம் 3-ந் தேதி கோழிக்கோட்டில் நடைபெற இருக்கிறது.

    எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் மறுவாழ்வு நிதிக்காக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X