கலைஞர் டிவியில் புது ஷோக்கள்

நான்கு புதிய ஷோக்கள் வரும் நாட்களில் அறிமுகமாகவுள்ளது. இதுதவிர தற்போது பெண்களைக் குறி வைத்து ஒளிபரப்பாகி வரும் அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சியை மேலும் சில வாரங்களுக்கு (தற்போது 74 வார நிகழ்ச்சி இது) நீட்டிக்கவும் கலைஞர் டிவி திட்டமிட்டுள்ளதாம். இந்த ஷோவுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு.
அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சி ஒரு டாக் ஷோ. இதை நடிகை ரோஹினி தொகுத்து அளித்து வருகிறார்.
இதுதவிர அறிமுகமாகப் போகும் நான்கு புதிய நிகழ்ச்சிகள் விவரம்...
அக்டோபர் 31ம் தேதி புதிய இசை தேடல் நிகழ்ச்சி ஒன்று தொடங்குகிறது. வானம்பாடி என்பது இதன் பெயர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதை தொகுத்து வழங்கப் போகிறார். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு, பெரிய தமிழ்ப் படம் ஒன்றில் பாடும் வாய்ப்பு அளிக்கப்படுமாம்.
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செயல்படுவர். வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
நவம்பர் 2ம் தேதி முதல் திருமாங்கல்யம் என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. நிறைய சினிமா நடிகர், நடிகையர் இதில் நடித்துள்ளனராம். தினசரி திங்கள் முதல வெள்ளி வரை பிற்பகல் 1.20 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.
இதுதவிர மானாட மயிலாட நிகழ்ச்சியின் 4வது சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இதன் சிறப்பு பகுதி நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகுமாம்.


Click it and Unblock the Notifications











