கருணாஸின் 'முக்குலத்தின் முகவரி'!

காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து வரும் கருணாஸ் உருவாக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்களை கவிஞர்கள் புலமைப்பித்தன், வைரமுத்து, பா.முருகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இதன் வெளியீட்டு சமீபத்தில் பசும்பொன் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடந்தது. இதில் நடிகர் செந்தில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் செந்தில், இங்கு கூடியிருப்பவர்கள் என் குலம், என் மக்கள். நான் என் குலத்தை மட்டுமே பார்ப்பேன். கட்சி பாகுபாடு பார்க்க மாட்டேன். எனது குலத்தைச் சேர்ந்த யாருடைய கல்யாணமானாலும் போவேன். திமுகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி. யாரும் என்னைத் தடுக்க முடியாது.
எனது குலத்தைச் சேர்ந்த கருணாஸ் மேலும் மேலும் புகழ் பெற வேண்டும் என்றார்.
Comments
album audio ஆடியோ கருணாஸ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முக்குலத்தின் முகவரி வெளியீடு karunas mukulathin mugavari pasumpon muthuramaligan thevar


Click it and Unblock the Notifications