twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலில் விழுந்தேனுக்கு நல்ல ஒபனிங்!

    By Staff
    |

    Nagulan and Sunaina
    சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய ஒபனிங்குடன் ரிலீசாகியுள்ளது சன் பிக்சர்ஸின் முதல் படைப்பான காதலில் விழுந்தேன்.

    நகுல், சுனேனா நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் பெரிய படங்களுக்கு நிகராக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து படத்தின் இயக்குநர் பி.வி.பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:

    'நாக்க முக்க' பாட்டு உண்மையிலேயே படத்துக்கு ஏகப்பட்ட இளைஞர் பட்டாளத்தை இழுத்து வந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

    எனக்குக் கிடைத்துள்ள பாக்ஸ் ஆபீஸ் நிவரப்படி கடந்த 3 தினங்களும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்தப் படம் நூறு சதவிகித கலெக்ஷனுடன் கணக்கைத் துவங்கியுள்ளது. பெரிய படங்கள் கூட இந்த அளவு வெற்றி பெற்றதில்லை. சமீபத்தில் வெளியான எந்தப் பெரிய படத்துக்கும் சவால் விடும் வசூல் இது.

    இன்னொன்று, சன் பிக்ஸர்ஸ் இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்துள்ள விதம். இன்று தமிழ்நாட்டில் இந்தப் படம் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி சிறப்பான விளம்பரம் சன் பிக்ஸர்ஸ் தந்து கொண்டிருக்கிறது. முதல் பட இயக்குநர் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது என்றார் பிரசாத்.

    படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும், சன் நெட்வொர்க்கின் தலைமை செயல் அலுவலருமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா இதுகுறித்து நம்மிடம் கூறியதாவது:

    விரைவில் இந்தப் படம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் தடைகளை மீறி வெளியாகும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி தானாகவே அங்கெல்லாம் ரிலீஸ் செய்ய வைத்துவிடும்.

    மற்றபடி இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் வெற்றியும், திரைப்படத் தயாரிப்பில் சன் பிக்சர்ஸுக்கு புதிய ஊக்கம் தருவதாக உள்ளது என்றார் சக்ஸேனா.

    அடுத்து தீ, பூக்கடை ரவி, தெனாவட்டு என வரிசையாக படங்களை களமிறக்கத் தயாராகி விட்டது சன் பிக்சர்ஸ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X