புது நடிகரின் பிட்...லட்சுமி ராய் தந்த நோஸ்-கட்!

'பிரபல நடிகையுடன் கிசுகிசு வரவேண்டும்... வராவிட்டால் உருவாக்க வேண்டும்!'- இந்த இரண்டாவது டெக்னிக்கை உபயோகிக்க ஆரம்பித்துள்ளார் ஒரு இளைஞர், அவர் பெயர் யுவா.
இவர் நடித்த முதல்படம் மோதி விளையாடு பாக்ஸ் ஆபீஸில் பப்படமாகிவிட, தனது அடிப்பொடிகளை வைத்து கிசுகிசு பரப்பும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்.
தனக்கும் லட்சுமி ராய்க்கும் மிக மிக மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ஆனால் அந்தத் தொடர்பு காதல் இல்லை என்றும் முன்னணி பத்திரிகைகளில் வருமாறு செய்துவிட்டாராம், தனது பிஆர்ஓ மூலம்.
அதுவும் எப்படி... "டோணி ஒரு ஜுஜூபி... அவர் கூட லட்சுமிராய்க்கு அதிகமான நெருக்கம் இல்லை. ஒரு பார்ட்டியில சந்தித்த ஆள்தான் டோணி. ஆனா நான் அப்படி இல்லை. எனக்கும் லட்சுமி ராய்க்கும் உள்ள தொடர்பு மிக ஆழமானது. நாங்க மணிக்கணக்கில் ஒண்ணா இருந்திருக்கோம்..., என்றெல்லாம் பிட்டுகளை டெவலப் செய்துள்ளார்.
இது குறித்து லட்சுமிராயிடம் கேட்டால், "ஒரே காமெடியா இருக்கு... அப்படி ஒரு ஆசாமியை எனக்குத் தெரியவே தெரியாது. டோணி எப்போதும் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்..." என்று ஒரே போடாகப் போடுகிறார்!
இதெப்டி இருக்கு!


Click it and Unblock the Notifications











