மைனாவை வாங்கிய உதயநிதி!

கொக்கி, லாடம் படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கி வரும் இந்தப் படத்தில் விதார்த் மற்றும் அமலா என்ற இரு புதுமுகங்கள் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
இவர்களைத் தவிர மற்ற வேடங்களிலும் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், படத்தை தாமே வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டாராம்.
ஏஜிஎஸ் மூவீஸ் தயாரித்த மதராசபட்டிணம் படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications