விஷு விருந்துக்கு மலையாளம் ரெடி!

மம்முட்டி நடிக்கும் அண்ணன் தம்பி, விஷுவுக்கு வருகிறது. படத்தின் கடைசி கட்ட நகாசு வேலைகள் கடந்த வாரத்துடன் முடிவடைந்தன. இதையடுத்து படம் திரையிடுவதற்குத் தயாராகி விட்டது. இப்படத்தில் மம்முட்டி இரு வேடங்களில் நடித்துள்ளார். லஷ்மி ராய், கோபிகா ஜோடிகளாக நடித்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனராம்.
அதேபோல மோகன்லாலின் இன்னட்டே சிந்தாவிஷ்யாயம் ஏப்ரல் 12 அல்லது 14ம் தேதி திரைக்கு வருகிறதாம். சத்யன் அந்திக்காடு இப்படத்தை இயக்கியுள்ளார். மோகன்லாலின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
மோகன்லாலின் கடந்த ஐந்து படங்கள் தோல்வியைத் தழுவியதால் இப்படத்தை லால் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இன்னொரு சூப்பர் ஸ்டாரான திலீப்பும் விஷு விருந்தில் கலந்து கொள்கிறார். அவரது முல்லா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சீனிவாசனின் பஞ்சமரத்தணலில் படமும், ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.
கூடவே, ஜெயராமின் பார்த்தன் கண்ட பரக்கோலம், சுரேஷ் கோபியின் புல்லட் ஆகியவையும் விஷுவுக்கு சீறிப் பாய காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











