தமிழச்சியா பிறக்கலையே .. நவ்யா

கனடாவில் வசிக்கும் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் இதுவரை 53 கின்னஸ் சாதனைகள் செய்திருக்கிறார். தற்போது 54-வது கின்னஸ் சாதனைக்காக ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்து இயக்குகிறார். 12 நாட்களில் இப்படத்தை இயக்கி முடிக்கப் போகிறார் சுரேஷ். இதற்கு முன் 75 நிமிடங்கள் ஒடக்கூடிய வகையில் 13 நாட்களில் எடுக்கப்பட்ட தி பாஸ்டஸ்ட் பார்வர்ட் திரைப்படம்தான் இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.
இப்போது அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் புதிய படத்தை எடுக்கிறார் சுரேஷ். படம் துவங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான் இதன் டைட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் நாயகன் சுரேஷூக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். இதன் துவக்க விழா சென்னை லீமெரிடியன் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நவ்யா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னைப் போன்ற நடிகைகள் நடித்து சம்பாதிக்கும் பணத்தில் நிலம் வீடு வாங்கலாம் கல்யாண மண்டபம் கட்டலாம் என்றுதான் யோசிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் ஜோகிம், இப்படத்தின் வருமானத்தில் 25 சதவிகிதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு உதவ ஒதுக்கியுள்ளார்.
அவருடைய நல்ல மனதைப் பார்த்துதான் நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரு தமிழர் இந்த சாதனையைச் செய்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அட நாமும் தமிழராய்ப் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் எழுகிறது, என்றார் நவ்யா.


Click it and Unblock the Notifications











