சென்னை-நீரவ் ஷாவின் ரூ. 100 கோடி கனவு!

By Staff

Niravsha
கோலிவுட், பாலிவுட்டின் 'ஹாட்' ஒளிப்பதிவாரான நீரவ் ஷா சொந்தமாக ஒரு மிகப் பெரிய திரைப்பட நகரை ரூ.100 கோடி செலவில் உருவாக்கப் போகிறார்.

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜ்ராவ் பிலிம் சிட்டிக்கு இணையாக இந்த திரைப்பட நகரை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நீரவ் ஷா.

இதற்காக ரூ.100 கோடியில் அவர் உருவாக்கியுள்ள திட்டத்துக்கு அரசுத் தரப்பிலும் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தத் தொகை தோராயமானதுதான், போகப்போக அதற்கு இரு மடங்காகனாலும் வியப்பதற்கில்லை, என்கிறார்கள்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் உள்ள அத்தனை நவீன வதிகளும் செய்து தரப்படும் என்கிறார் நீரவ் ஷா.

ஒளிப்பதிவாளர்களின் சிரமத்தை மிகவும் உணர்ந்தவர் என்பதால், ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நிரந்தர ஒளிவசதியை (காட்சிக்குத் தேவையான ஒளி வசதியை எந்த நேரத்திலும் பெறமுடியும்!) இந்த ஸ்டுடியோவில் அமைக்கவிருக்கிறாராம் நீரவ் ஷா.

இந்த ஸ்டுடியோவுக்கான பூமி பூஜை செப்டம்பர் முதல் வாரத்தில் போடப்படவுள்ளது.

சென்னை நகருக்குள்ளேயே ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட நகர் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி தற்போது மூடப்பட்டுக் கிடக்கிறது அந்த அருமையான நகரம். இதனால் தமிழ்ப் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.

இந் நிலையை மாற்றி, பல மொழிகளில் ஏராளமான படங்கள் உருவாகும் சென்னையில் அனைத்து வசதிகளும் நிறைந்த நிரந்தரமான ஸ்டுடியோ அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் நீரவ் ஷா.

சமீபத்தில் அஜீத்தின் பில்லாவில் கேமராவில் விளையாடியவர் இவர் தான். ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கும் ரோபாவுக்கும் இவர் தான் கேமராமேன். இவரது சொந்த ஊர் சென்னை தான்.

நல்ல முயற்சி, திருவினையாகட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X