எதிர்கட்சிகள் விமர்சனம்; சிரஞ்சீவி தம்பிக்கு அவசர கல்யாணம்

By Staff

ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணுக்கும், அவர் கடந்த ஏழு வருடங்களாக கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வரும் காதலியும், முன்னாள் நடிகையுமான ரேணு தேசாய்க்கும் நேற்று அவசரம் அவசரமாக கல்யாணம் நடந்தது.

பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண். அண்ணை போல் இவரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது பிரஜா ராஜ்யம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவரும் முதல் மனைவி நந்தினியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சமீபத்தில்தான் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

நந்தினியைப் பிரிந்து வாழத் தொடங்கிய பவன் கல்யாண், 8 ஆண்டுகளுக்கு தன்னுடன் பத்ரி மற்றும் ஜானி ஆகிய தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்த ரேணு தேசாயுடன் காதல் கொண்டார்.

இந்நிலையில் முதல் மனைவி நந்தினி, தனக்கு விவகாரத்து கொடுக்காமல் பவன் கல்யாண் அடுத்த கல்யாணம் செய்து கொள்ள கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து இருவரும் கல்யாணம் செய்யாமலேயே ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும் பிறந்தான்.

பவன் கல்யாணுக்கு பிரஜா ராஜ்யம் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து இவரது சொந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன.

கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது சரியா என்று சராமரியாக கேள்வி கணைகள் தொடுத்தன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் பவன் கல்யாணுக்கு அவருடைய முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்தது. அவருக்கு ஜீவனாம்சமாக 5 கோடி ரூபாய் கொடுப்பதாக அவர் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று பவன் கல்யாண் ரேணுவை அவசர கல்யாணம் செய்து கொண்டார். இதில் சிரஞ்சீவி, அவரது மூத்த சகோதரர் நாகேந்திர பாபு மற்றும் குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கல்யாணத்தின் போது அவர்களது மகன் அகிரா நந்தனும் உடனிருந்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X