ஆஸ்திரேலியாவில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி பாடல் நிகழ்ச்சி

கவிஞர் வைரமுத்து சுமார் 7,000 திரைப்பாடல்களை எழுதியுள்ளார். இதில் ஆங்கிலச் சொல்லே இல்லாத, தூய தமிழ் பாடல்கள் மட்டும் இடம் பெறும் மாபெரும் கலை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் தலைப்பு 'வைரத்தில் முத்துக்கள்'. இதில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.
மேலும், நடிகர் விவேக், பின்னணி பாடகர்கள் மனோ, உன்னி கிருஷ்ணன், சுஜாதா, சுவேதா மேனன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர்.
வைரமுத்துவின் முதல் பாடலான 'பொன்மாலைப் பொழுது' முதல் அன்மையில் எழுதிய 'உசுரே போகுதே' வரை 40 பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஜூலை 3-ந் தேதி மாலை 7 மணிக்கும், மெல்போர்ன் நகரில் ஜூலை 4-ந் தேதி மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் விவேக் குழுவினரின் 'வைரமுத்துவின் ரசிகை' என்ற நாடகமும் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி இலங்கையில் வாழும் தமிழ் குழந்தைகளின் நல நிதிக்காக நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கவிஞர் வைரமுத்து நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.


Click it and Unblock the Notifications











