தாத்தா ஆனார் பிரபு!

By Staff

Prabhu with wife, son Vikram and Ujjayini
இளைய திலகம் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம்-உஜ்ஜைனி தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரபுவின் மகன் விக்ரமுக்கும், குமாரபாளையத்தைச் சேர்ந்த உஜ்ஜைனிக்கும் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து உஜ்ஜைனி கர்ப்பமானார். நிறைமாத கர்ரப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அவருக்கு நேற்று பகல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரன் பிறந்த தகவல் பொள்ளாச்சியில் சிலம்பாட்டம் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த பிரபுவுக்குப் போனது. இதையடுத்து அவர் சென்னைக்கு விரைந்து வந்து பேரனைப் பார்த்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில் பிரபு தாத்தா ஆன தகவலை அறிந்ததும் குசேலன் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், இயக்குநர் பி.வாசு ஆகியோர் தொலைபேசியில், பிரபுவைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல கமல்ஹாசனும், பிரபுவைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

தனது தந்தையே பேரன் ரூபத்தில் பிறந்துள்ளதாக பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எல்லோருமே அப்பாதான் பிறந்துள்ளதாக கூறியுள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே பேரனுக்கு கணேசன் என பெயர் சூட்ட தீர்மானித்துள்ளோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X